×

இதென்ன ‘X’ சப்ஸ்கிரிப்ஷன்?!

உலக அளவில் டிரெண்டிங்கில் இருக்கும் கேள்வி இதுதான். அமெரிக்காவைச் சேர்ந்த தொழில் நிபுணர் அலெக்ஸ் கோஹெனிடம் அவரது மனைவி ஐமெஸ்ஸேஜில் ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். அதாவது இதென்ன ‘ X’ சப்ஸ்கிரிப்ஷனுக்கு 8 டாலர்கள் செலவு? அதற்கு கோஹென் ‘இதை எப்படி நான் சொல்வேன்?’ எனக் கேட்க, இந்த கணவன் -மனைவி இருவரின் மெஸ்ஸேஜ்கள்தான் இப்போது உலக அளவில் டிரெண்டிங்கில் உள்ளது. பலரும் ‘X’ என்பது டுவிட்டரின் மாற்றப்பட்ட புதிய பெயர் என அறிந்திடாத நிலையில் இது ஏதோ ஆபத்தான விளையாட்டோ, அல்லது ஆபாசத் தளமோ என்னும் ஐயம் உண்டாகியிருக்கிறது. இப்படித்தான் அந்த மனைவியும் என்ன எனக் கேள்வி எழுப்ப, பலரும் டுவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க்கையே டேக் செய்து , கொஞ்சம் அவங்களுக்கு இதென்ன என்று விளக்குங்கள் எனக் கூறி கலாய்த்து வருகிறார்கள்.

 

The post இதென்ன ‘X’ சப்ஸ்கிரிப்ஷன்?! appeared first on Dinakaran.

Tags : US ,Alex Cohen ,ImeSage ,Dinakaran ,
× RELATED சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது